கோவாவில் நடந்துள்ள சம்பவம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. அங்கு சாலையில் சென்று கொண்டிருந்த மூவர் தடுக்கி விழுந்து அருகில் வைக்கப்பட்டிருந்த பிரதமர் நரேந்திர மோடியின் கட்அவுட் மீது மோதியுள்ளனர். அதற்காக அந்த மூவரையும் தடுப்புக் காவலில் கோவா போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். நல்வாய்ப்பாக பிரதமரின் கட் அவுட்டுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என காவல்துறை தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.