தந்தை பெரியாரின் வழியில், மாநிலங்களின் சுயமரியாதையை மீட்க ஒன்றிணைவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் அவர், "உடன்பிறப்பே, வைக்கம் வழங்கிய அறிவொளியில் சமத்துவச் சமூகத்திற்கான வெளிச்சத்தைப் பார்.. காரிருள் என வருகிறது "ஒரே நாடு ஒரே தேர்தல்" திட்டம். மாநிலங்களின் சுயமரியாதையை மீட்க ஜனநாயகச் சக்திகள் ஒன்றிணைவோம்! வெற்றி காண்போம்!" என்று குறிப்பிட்டுள்ளார்.