சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (ஆகஸ்ட் 16) அதிமுக அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், இபிஎஸ் வழிகாட்டுதலில் 2026ஆம் சட்டமன்ற தேர்தலை சந்திப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், உள்ளாட்சி, சட்டமன்ற தேர்தலில் வெல்வதற்கான வியூகம், கூட்டணி பற்றி இபிஎஸ் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.