"மெய்யழகன்" திரைப்படத்தின் நீளம் குறைப்பு

83பார்த்தது
"மெய்யழகன்" திரைப்படத்தின் நீளம் குறைப்பு
"மெய்யழகன்" திரைப்படத்தின் இரண்டாம் பாதி சற்று நீளமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், படத்தின் நீளம் குறைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக "மெய்யழகன்" திரைப்படத்தின் இயக்குநர் பிரேம் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒரு படைப்பாளியின் முதல் கடமை மக்களின் குரல்களுக்கு செவிமடுப்பது. எல்லோரது திருப்தியும் எனக்கு முக்கியம். எனவே இன்று முதல் 18 நிமிடங்கள் 42 நொடி காட்சிகள் நீக்கப்பட்டு, திரையிடல் தொடரும்" என்று தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி