தமிழகத்தில் கொலை, கொள்ளை அதிகரித்து சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ், "கசாப்பு கடைகளில் ஆடு வெட்டுவது போல் தமிழகத்தில் மனிதர்களை வெட்டுவது அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொலை நடக்காத நாளே இல்லை என்ற அளவுக்கு கொலை நகரமாக மாறியுள்ளது. தமிழகத்தில் அரசியல் பிரமுகர்களுக்கும், மக்களுக்கும் பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.