டெல்லியில் இன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு கடைசி வரிசைக்கு முன் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், “ஜனநாயகத்தில் ஆற்றல் மிக்கவராக ராகுல் காந்தி செயல்படுவதை சகித்துக்கொள்ள முடியாத பாஜக அரசு, அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இதனை, தமிழ்நாடு காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது” என்றார்.