நெல்லை ரூ.6 ஆயிரம் நிவாரணம் பெற கடைசி நாள்

52பார்த்தது
நெல்லை ரூ.6 ஆயிரம் நிவாரணம் பெற கடைசி நாள்
தென் தமிழகத்தில் பெய்த கனமழையால் திருநெல்வேலி தூத்துக்குடி பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் தங்களது உடமைகளை இழந்தனர். இந்நிலையில் கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு ரூ.6 ஆயிரம் நிவாரண தொகை அறிவித்தது. இதற்கான டோக்கன்கள் வழங்கப்பட்டு, நெல்லை மாவட்டத்தில் 92% மக்களுக்கு தற்போது வரை நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை மாலை 5 மணி வரை நிவாரண தொகை வழங்கப்படும் எனவும் இதுவரை நிவாரண தொகை பெறாதவர்கள் இந்த இறுதி வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி