கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்படுவதற்கு முன்பு கிங்கிணி என்ற வளர்ப்பு கிளி பயங்கர சத்தத்துடன் கூச்சலிட்டதுடன், இறகுகள் பிய்த்துக்கொண்டு வரும் அளவிற்கு இரும்பு கூண்டில் ஆக்ரோஷமாக முட்டிக்கொண்டுள்ளது. சுதாரித்துக்கொண்டு வெளியே வந்து பார்த்தால் நிலச்சரிவு ஏற்பட்டுக் கொண்டிருந்தது. உடனடியாக அருகில் இருந்தவர்களுக்கு தகவல் கொடுத்ததுடன், அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு வந்துவிட்டோம் என வயநாடு சூரல்மலையை சேர்ந்த வினோத் என்ற இளைஞர் கூறியுள்ளார்.