வாகனம் மோதி லாரி டிரைவர் உயிரிழப்பு.

2249பார்த்தது
வாகனம் மோதி லாரி டிரைவர் உயிரிழப்பு.
வந்தவாசி அடுத்துள்ள வேதார குப்பம் பகுதியை சேர்ந்தவர் தேவகுமார் (54) லாரி டிரைவர். இவர் புலியரசிமேடு என்ற இடத்தில் லாரியை நிறுத்தி விட்டு சாலையை கடக்க முயன்றார். போது அந்த வழியாக வந்த வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

இதில் படு காயமடைந்த தேவகுமாரை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி