கிருஷ்ணகிரி: விஷம் குடித்து முதியவர் தற்கொலை.

54பார்த்தது
கிருஷ்ணகிரி: விஷம் குடித்து முதியவர் தற்கொலை.
கோவை மாவட்டம் கோமலூர் சீடபாக்கம் பகுதியை சேர்ந்தவர் கிருபாகாந்த் (63). இவர் குடும்ப பிரச்சினையால் கோபித்து கொண்டு கிருஷ்ணகிரிக்கு வந்து இங்குள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே விஷம் குடித்து விட்டு மயங்கிய நிலையில் இருந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி