கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சிறுசேமிப்புத்துறை சார்பாக, அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்களில் அதிக வசூல் சாதனை புரிந்த அஞ்சலக சிறுசேமிப்பு முகவர்களுக்கு கேடயங்கள், பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் கே. எம். சரயு இ. ஆ. ப. , இன்று 29. 07. 2024 வழங்கி, வாழ்த்துக்களை தெரிவித்தார். உடன் மாவட்ட ஆட்சியரின்நேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு) எம். முரளிதரன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.