கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த உத்தனப்பள்ளி அருகே உள்ள கிருஷ்ணம்மா கொத்தூர் கிராமத்தை சேர்ந்த மதுசூதனன் மனைவி திவ்யா (28) இவர் நேற்று காலை தனியார் தொழிற்சாலைக்கு வேலைக்கு செல்வதற்கு மினி பஸ்ஸில் ஏற வந்த போது இவரது 3 வயது மகன் கிரிவாஸ் பஸ்ஸின் குறுக்கே ஓடிவந்த போது எதிர்பாராத விதமாக மினி பஸ் முன்பக்க டயரில் சிறுவன் மீது ஏறி இறங்கியதால் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வந்த உத்தனப்பள்ளி போலீசார் சிறுவனின் உடலை மீட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை நடத்தி வருகின்றனர்.