கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் போச்சம்பள்ளி அருகே உள்ள சமத்துவபுரம் அருகே பழமையான அரசமரம் நெடுஞ்சாலையை ஓரத்தில் இருந்து நிலையில் நேற்று பெய்த கனமழைக்கு முறிந்து சாலையில் விழுந்தது.
இதில் நெடுஞ்சாலை துறை யினர். சுமார் 3 மணி நேரம் போரடி மரத்தை அப்புறப்படுத்தினர் அதன் பிறகு போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. அந்த வழியாக பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்வோர் வேலைக்கு செல்வோர் என பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்படைந்தர்.