
ஊத்தங்கரை: விளையாட்டு வீரர்களுக்கு நிதி உதவி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் த. மோனிகா, கோ. கவிப்பிரியா அதேபோல அதியமான் மெட்ரிக் பள்ளியில் பயின்று வரும் 8-ஆம் வகுப்பு மாணவன் ர. மௌரிஷ் மற்றும் மாணவி ஸ்ரீவாணி ஆகியோர் நேபாள தலைநகர் காட்மண்டுவில் நடைபெறும் 2025 சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க உள்ளனர். அவர்களுக்கு சீனிவாசா அறக்கட்டளை சார்பில் தலைவர் திருமால் முருகன் தலா 30,000 நிதி உதவி வழங்கினார். பங்குபெறும் மாணவ மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.