ஒரு காலத்தில் இந்தியாவின் பெருமையாக இருந்த 80'ஸ் காலகட்டத்தின் ஹீரோவாக வலம் வந்த பைக் தான் ராஜ்தூத்'. நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மோட்டார் சைக்கிளை புதிய பொலிவுடன் சந்தைக்கு கொண்டு வர யமஹா நிறுவனம் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. புதிய ராஜ்தூத்தில் பல நவீன அம்சங்கள் இடம்பெறும் என்றும் வீடியோ மீட்டர், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் கொண்ட எம்ஐ டிரிப் மீட்டர், மொபைல் சார்ஜிங் போர்ட், டபுள் டிஸ்க் பிரேக் மற்றும் டியூப்லெஸ் டயர்களுடன் வரும் என கூறப்படுகிறது.