கிருஷ்ணகிரியில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை.

61பார்த்தது
கிருஷ்ணகிரியில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை.
கிருஷ்ணகிரியில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகரின் பல்வேறு இடங்களில் நகர மன்ற தலைவர் ஆய்வு. கிருஷ்ணகிரி நகரத்திற்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் நகர மன்ற தலைவர் பரிதா நவாப் ஆய்வுப் பணியை மேற்கொண்டார். மேலும் எதிர்வரும் மழை காலத்தையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருஷ்ணகிரி நகரத்தில் சுற்றியுள்ள மழைநீர் கால்வாய், மற்றும் கழிவு நீர் கால்வாய் தூர்வாரும் பணிகள நேரில் சென்று பார்வையிட்டார்.

இதில் கிருஷ்ணகிரி நகரில் மழைநீர் தேங்காதவாறும், கழிவுநீர் கால்வாய்களில் தங்கு தடை இன்றி செல்லும் வகையில் பணியினை செய்யுமாறு அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து நகராட்சியில் பணிபுரியும் அனைத்து துப்புரவு பணியாளர்கள், விரைவாக இப்பணியை செய்து முடிக்க உத்தரவிட்டார்.

இந்த நிகழ்வில் கிருஷ்ணகிரி நகர மன்ற தலைவர் பரிதாநவாப் உள்ளிட்ட 27வது வார்டு நகர மன்ற உறுப்பினர் பிர்தோஷ்கான், வட்ட செயலாளர் கனல்சுப்பிரமணி, வட்ட பிரதிநிதி முருகன், நகராட்சி நிர்வாகிகள் துணை ஆய்வாளர் அங்கமுத்து, துணை மேற்பார்வையாளர் சரவணன், காளியப்பன், துணை பணி மேற்பார்வையாளர் செல்வம், மற்றும் அனைத்து நகராட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி