இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அசோக் கலெக்டரிடம் மனு.

65பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்
இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அசோக் கலெக்டரிடம் மனு அளித்தார், அதில் குறிப்பிட்டிருந்ததாவது,

பள்ளி, கல்லூரிகளில் சாதி அடையாளங்களை களைவதாக கூறி தமிழக அரசு நீதிபதி சந்துரு தலைமையில் தனிநபர் விசாரணை குழு அமைக்கப்பட்டு மாண்புமிகு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களிடம் அறிக்கையை அளித்துள்ளது தனிநபர் விசாரணை குழு அளித்துள்ள அறிக்கை முழுவதும் இந்து சமய நம்பிக்கையை சீர்குலைக்கும் வண்ணம் உள்ளது.
இந்து சமய நம்பிக்கை அடையாளமான காப்பு கயிறு கட்டுதல் கிரகமிடுதல் பூ வைத்தல் போன்றவைகளை தடை செய்திட வேண்டும் என தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சாதிக்கு என்று தனிப்பட்ட அடையாளப்படுத்தக்கூடிய கயிறுகள் இல்லை ஆனால் கடவுள் மீது நம்பிக்கை கொண்ட இந்து சமூகத்தை சார்ந்தவர்கள் ஆலயங்களில் வழிபாடு நடத்திய சமய சின்னமான பெயர்கள் கட்டுவது வழக்கம்.
இந்துக்கள் திருநீறு குங்குமம் சந்தனம் இட்டுக் கொள்வது சமய நம்பிக்கை சார்ந்தது தற்பொழுதும் நடைமுறையில் உள்ளது பெண்கள் பூ வைத்துக் கொள்வது என்பது வாழ்வியல் நடைமுறை திருநீர் குங்குமம் சந்தனம் பூ நீதியாசர் சந்துரு அவர்களின் அறிக்கை மறைமுகமாக மதம் மாற்றத்தை ஊக்குவிப்பதாக உள்ளது மாற்று மதத்தைச் சார்ந்தவர்கள் தங்களின் மத அடையாளமான சிறுவை ஹிஜாப் போன்றவைகள் பற்றி அரசுக்கு அளித்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி