கிருஷ்ணகிரி மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் போர்க்கொடி.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். சீமான் மீது பல குற்றச்சாட்டுக்களை அவர்கள் வைத்துள்ளனர். இந்நிலையில், கட்சியில் யாரும் வளரக் கூடாது என சீமான் நினைக்கிறார் என மண்டல நா. த. க. ஒருங்கிணைப்பாளர் கரு. பிரபாகரன் தெரிவித்துள்ளார். மேலும், நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாகவும் கரு. பிரபாகரன் அறிவித்துள்ளார்.