வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் கிருஷ்ணகிரி மாவட்டம் பாண்டிச்சேரி டு கர்நாடகா செல்லும் என். ஹெச் 77 தேசிய நெடுஞ்சாலையில் அதிக அளவில் வாகனங்கள் செல்வது வழக்கம் இந்த தேசிய நெடுஞ்சாலையில் பாண்டிச்சேரி, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மூன்று மாநிலங்களுக்கு செல்லும் சாலை என்பதால், கர்நாடகாவில் இருந்து அதிக அளவில் தமிழ்நாடு வழியாக பாண்டிச்சேரிக்கு வாகனங்கள் செல்வது வழக்கம், இந்நிலையில் இன்று நள்ளிரவு முதல் அதிக அளவில் பனிமூட்டம் காணப்படுகிறது இதனால் வாகன ஓட்டிகள் சாலை முற்றிலும் தெரியாத நிலையில் மிக சிரமப்பட்டு வாகனங்களை ஒட்டி செல்கின்றனர்.
மேலும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து அதிகாலையில் காய்கறி மற்றும் இறைச்சி எடுப்பதற்காக செல்லும் பொதுமக்களும் அதிக பணி மூட்டம் காரணமாக வெளியில் வராமல் சாலைகள் வெரிச்சோடி காணப்பட்டது.