மாவட்ட அளவிலான மாபெரும் கிரிக்கெட் போட்டி.

83பார்த்தது
மாவட்ட அளவிலான மாபெரும் கிரிக்கெட் போட்டி.
பாப்பாரப்பட்டி ஊராட்சியில் மாவட்ட அளவிலான மாபெரும் கிரிக்கெட் போட்டி. கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியம் பாப்பாரப்பட்டி ஊராட்சியில் மாவட்ட அளவிலான மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைப்பெற்றது. இப்போட்டியில் சேலம், சிவகங்கை, தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 32 அணிகள் பங்கு பெற்றது. இறுதியாக ட்ரீம் கில்லர்ஸ் மற்றும் எஸ்டிம் அணிகள் பங்கு பெற்றது. முடிவில் ட்ரீம் கில்லர்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பை மற்றும் ரூ 50024 ரூபாய் ரொக்க பரிசும் தட்டி சென்றது. நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி சங்கர், திமுக தொண்டரணி துணை அமைப்பாளர் சங்கர், ஒன்றிய குழு உறுப்பினர் வடிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர். ஒருங்கிணைப்பாளர் ராமதாஸ் அனைவரையும் வரவேற்று பேசினார். இப்போ போட்டியை ஏராளமான கிராம மக்களும் , இளைஞர்களும் ட்ரீம்ஸ் கில்லர் வீரர்கள் உள்ளிட்டோர் பார்த்து ரசித்தனர்.

தொடர்புடைய செய்தி