கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் குருபரப்பள்ளி முருகன் கோவில் அருகில் , உதயம் டிரஸ்ட் இணைந்து நடத்தும் மாபெரும் கைப்பந்து போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தே. மதியழகன் தனது வாழ்த்துகளை தெரிவித்து, பரிசுகளை வழங்கினார். உடன் கைப்பந்து போட்டி வீரர்கள், மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய , நகர, பேரூர் கழக செயலாளர்கள், அணைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், துணை தலைவர்கள், கவுன்சிலர்கள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் BLA2 நிர்வாகிகள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் அனைவரும் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.