கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள அலேகிருஷ்ணாபுரம் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு வீரபத்திர சாமி கோவிலில் திருவிழாவில் சாமி, பூங்கரகம் தூக்குவது தொடர்பாக ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் அதே கிராமத்தை சேர்ந்த மல்லப்பா (39) என்பவரை தாக்கியதாக கூறப்படு கிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வேப்பனப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தினர். அதே கிராமத்தை சேர்ந்த முனியப்பா, வெங்கடேசப்பா, மல்லப்பா, வீரபத்திரப்பா, வீரபத்திரன். சீனிவாசன், நீலகிரியப்பா ஆகிய 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.