கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள பசவனபுரம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (28) வக்கீல். இவர் சம்வம் அன்று மாலை ஏணிமுச்சந்திரம் போருந்து நிறுத்தம் அருகே டூவீலரில் சென்றுக்கொண்டிருந்த போது டூவீலரை சாலை ஓரமாக நிறுத்தி விட்டு அவர் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் மது குடித்துக்கொண்டிருந்த சிலர் எங்களை செல்போனில் வீடியோ எடுக்கிறாயா என கேட்டு அவரை தாக்கி விட்டு தப்பி சென்றனர். இதில் காயமடைந்த வக்கீல் கிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அவர்கள் சின்ன அத்திக்கோட்டையை சேர்ந்த தனுஷ் (22) கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த மஞ்சுநாத் (22) பெரிய பூதக்கோட்டையை சேர்ந்த ரஞ்சித்குமார் (22) ஆகியோர் வக்கீலை தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள சின்ன அத்திக்கோட்டையை சேர்ந்த புவனேஷ் (22) என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.