போச்சம்பள்ளி பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை.

1538பார்த்தது
போச்சம்பள்ளி அருகே பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் காலை 6 மணி முதல் பாரூர், அரசம்பட்டி, புலியூர், மஞ்சமேடு உள்ளிட்ட பல பகுதிகளில் சூறாவளி காற்றால் மரங்கள் பேயாட்டம் ஆடியது. மேலும் கனமழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் தண்ணீர் தேங்கி நின்றது. மழை பெய்ததால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் மழையின் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 4 மணிநேரத்திற்கும் மேலாக மின்சாரம் இல்லாததால் குழந்தைகள், முதியவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி