கிருஷ்ணகிரியில் பரிதாபம்: சிறுவன் பலி!

3269பார்த்தது
கிருஷ்ணகிரியில் பரிதாபம்: சிறுவன் பலி!
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கொத்தஜிகூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவருடைய மகன் தேஜாஸ் (16) இவர் பேளகொண்டப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இவர் சம்பவம் அன்று ஆனேக்கல்- பூனப்பள்ளி சாலையில் சென்றார்.

அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேன் டூவீலர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த தேஜாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து மத்திகிரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி