ஜெகதேவியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ பாலமுருகர் ஆலயத்தில் இன்று ஆடி கிருத்திகையை முன்னிட்டு ஜெகதேவி சுற்றுப்புறத்தில் உள்ள ஐகுந்தம் , தொகரப்பள்ளி, செந்தாரப்பள்ளி , உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும் அலகு குத்தியும் வந்தனர். சிவனாபுரத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் 151அடியில் அலகு குத்தி வந்து நேர்த்திக்கடன் செலுத்தி முருகனை வழிபட்டார்.