பாஜகவின் அமைப்புசாரா சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

85பார்த்தது
*பாஜகவின் அமைப்புசாரா தொழிலாளர் பிரிவின் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. *
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பாஜகவின் அமைப்புசாரா தொழிலாளர் பிரிவின் சார்பில் பெங்களூரு ரோட்டில் பழைய வீட்டு வசதி வாரிய முன்பாக தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அமைப்புசாரா பிரிவு மாவட்ட தலைவர் திருமலை பெருமாள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் கே. எஸ். ஜி சிவபிரகாசம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தண்ணீர் பந்தல் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோடீஸ்வரன், முனவரி பேகம், மாவட்ட பொருளாளர் கவியரசு, மாவட்ட பொதுச் செயலாளர் கோவிந்தராஜ், பட்டியல் அணி மாவட்ட தலைவர் ரவி, மகளிர் அணி மாவட்ட தலைவர் விமலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் வெயிலின் தாகத்தை தணிக்கும் வகையில் பொதுமக்களுக்கு நீர் மோர் தண்ணீர் வெள்ளரிக்காய் தர்ப்பூசணி உள்ளிட்ட பழ வகைகள் வழங்கினார்கள். பொதுமக்களும் ஆர்வமுடன் வந்து பழ வகைகளை பருகிச் சென்றார்கள். மேலும் பட்டியல்அணி மாவட்ட பொதுச் செயலாளர் திருமுகம், மாவட்ட துணைத் தலைவர் செந்தில் சட்டமன்ற பொறுப்பாளர் கிருஷ்ணன், நகரத் தலைவர் கவுன்சிலர் சங்கர், மாவட்டத் துணைத் தலைவர் ஜீவா அமைப்புசாரா நகரத் தலைவர் அருண், இளைஞர் அணி ஹரி, ஹரிசங்கர், சிவா, கார்த்திக், கவிதா, ஹரி, சக்தி, சங்கர்,

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி