கஞ்சா வைத்திருந்த இரண்டு பேருக்கு காப்பு

82பார்த்தது
கஞ்சா வைத்திருந்த இரண்டு பேருக்கு காப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் மூக்கண்டப்பள்ளி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு டூவீலரில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனை செய்தபோது அவர்கள் 930 கிராம் கஞ்சா கொண்டு வந்தது தெரியவந்தது. அதையெடுத்து போலீசார் விசாரணையில் அவர்கள் பெங்களூருவை சேர்ந்த சாகித் உசேன் (24) சையத் மன்சூர் (26) என்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் கஞ்சா மற்றும் டூவீலரை பறிமுதல் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி