ஐக்கிய விவசாயிகள் முன்னணி கிருஷ்ணகிரி எம்பியிடம் மனு வழங்கல்

85பார்த்தது
ஓசூரில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி அமைப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத் அவர்களிடம் கோரிக்கை மனு வழங்கினர்

ஓசூர் ரயில்வே நிலையம் அருகே உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இன்று ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில விவசாய சங்க துணை தலைவர் ரகும்மையா, ஏ ஐ டி யு சி தொழிற்சங்க தலைவர் மாதையன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினர் கோபிநாத் கலந்து கொண்டார்.

அவரிடம் டெல்லியில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி அமைப்பு சார்பில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டங்கள் குறித்து விளக்கிப் பேசிய அந்த அமைப்பினர், நீண்ட கால கோரிக்கைகளான ஊதியம் மற்றும் உத்திரவாதமான குறைந்தபட்ச ஆதரவு விலை, கொள்முதல் விரிவான கடன் தள்ளுபடிமின்சாரத்தை தனியார் மயமாக்கலை ரத்து செய்தல், உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர். முன்னதாக அவர் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் கோபிநாத் இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசுவதாக தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி