தொழில் நிறுவனங்களுக்கு இடையேயான கிரிக்கெட் லீக் போட்டிகள்

63பார்த்தது
ஓசூரில் தொழில் நிறுவனங்களில் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு இடையே ஒற்றுமையை உருவாக்கும் விதமாகவும், தொழிலாளர்களை உற்சாகப்படுத்தும் நோக்கத்திலும் 5 ஆம் ஆண்டு கிரிக்கெட் லீக் போட்டிகள் இன்று துவங்கியது. இந்த கிரிக்கெட் போட்டிகளில் ஓசூர் பகுதியை சேர்ந்த டிவிஎஸ் , அசோக் லேலண்ட், டைட்டன் உள்ளிட்ட முன்னணி தொழில் நிறுவனங்கள் உட்பட 32 தொழில் நிறுவனங்களை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர்.

ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் துவங்கிய இந்த கிரிக்கெட் லீக் போட்டிகளை ஓசூர் காவிரி மருத்துவமனை மற்றும் ஓசூர் இண்டஸ்ட்ரிஸ் அசோசியேசன் ஆகியோர் இணைந்து நடத்தினர். காவேரி மருத்துவமனை குழும செயல் இயக்குனர் விஜயபாஸ்கர், ஓசூர் இண்டஸ்ட்ரிஸ் அசோசியேசன் தலைவர் சுந்தரய்யா ஆகியோர் மட்டையால் பந்தை அடித்து போட்டிகளை துவக்கி வைத்தனர். முன்னதாக விளையாட்டு மைதானத்தில் வீரர்கள் பங்கேற்ற அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து கிரிக்கெட் விளையாட்டு ஜோதியும் ஏற்றி வைக்கப்பட்டது.

மொத்தம் நான்கு ஞாயிற்றுக்கிழமைகள் தொடர்ச்சியாக இந்த கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசாக வெற்றி கோப்பை ஒரு லட்சம் ரூபாயும், இரண்டாம் பரிசாக கோப்பை மற்றும் 75 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக கோப்பை மற்றும் 50 ஆயிரம் ரூபாயும் பரிசாக வழங்கப்பட உள்ளது.

தொடர்புடைய செய்தி