வனப்பகுதியிலா தண்ணீர் நிரப்பும் வனத்துறையினர்.

80பார்த்தது
வனப்பகுதியிலா தண்ணீர் நிரப்பும் வனத்துறையினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனச்கரகத்தில் கோடை வெயிலால் வனத்தில் செடி, கொடிகள் தீப்பற்றி எரிந்து நாசமடைந்து வருகிறது. கோடை வெயிலால் வனப்பகுதியில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் வற்றி விட்டதால், வனப்பகுதியில் வாழும் யானைகள், மான், மயில் உள்ளிட்ட விலங்குகள் உணவு, தண்ணீர் கிடைக்காமல் கிராமங்கள் நோக்கி வருகின்றன. குறிப்பாக யானைகள் கூட்டம், அடிக்கடி விவசாய நிலங்களில் உள்ள பயிர்களை நாசம் செய்து வருகின்றன. இதனையடுத்து, ஓசூர் வன கோட்ட உயிரின காப்பாளர் கார்த்திகேயினி மேற்பார்வையில், ஜவளகிரி உள்ளிட்ட பல பகுதிகளில், யானைகள் நடமாட்டம் உள்ள இடங்களில் தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் யானைகள் குட்டிகளுடன் கூட்டமாக வந்து, தண்ணீர் குடித்து செல்லும் காட்சி அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

தொடர்புடைய செய்தி