கலெக்டர் அலுவலக்தில் எரிவாயு நுகர்வோர் முகவர்கள் கூட்டம்

67பார்த்தது
கலெக்டர் அலுவலக்தில் எரிவாயு நுகர்வோர் முகவர்கள் கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கத்தில் பொதுமக்கள் நலன் கருதி எரிவாயு நுகர்வோர் முகவர்கள் கூட்டம் நடைபெற்றது இக்கூட்டம் மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் நடைபெற்றது மாவட்ட வருவாய் அலுவலர் முன்னிலை வகுத்தார் இதில் எரிவாயு முகவர்கள் மாவட்ட நுகர்வோர் குழுக்கள் கலந்து கொண்டனர் இதில் விவாத பொருளாக எரிவாயு சிலிண்டர்களை அரசு நிர்ணயம் செய்த விலைக்கு மேல் நுகர்வோரிடம் பணம் வசூலிக்க கூடாது இரு சக்கர வாகனத்தில் சிலிண்டர்கள் கொண்டு செல்லக்கூடாது மற்றும் எடை போட்டு சரி பார்த்து சிலிண்டர்களை நுகர்வோர்களுக்கு வழங்க வேண்டும் போன்ற அரசு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று நுகர்வோர் குழுக்களால் வலியுறுத்தி பேசப்பட்டது மற்றும் விதி மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது

தொடர்புடைய செய்தி