கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள காரப்பள்ளி
யைச் சேர்ந்தவர் இளையராஜா. இவருடைய வீட்டில் பிரம்ம கமலம் செடி வளர்த்து வருகிறார். இந்த மலர் வருடத்திற்கு இரண்டு முறை பூக்கள் பூப்பதாக கூறப்படுகிறது. இந்த மலர் இரவில் பூத்து காலை நேரத்தில் மொட்டாக வாடிவிடும் இந்த நிலையில் இளையராஜா வீட்டில் நேற்று முன்தினம் பிரம்ம கமலம் செடியில் 80 பிரம்ம கமல பூக்கள் பூத்தது. இந்த பூக்களுக்கு அவரது குடும்பத்தினர் பூஜை செய்து வழிபாடு செய்தனர். ஒரே செடியில் பூத்த 80 பூக்களை அப்பகுதி மக்கள் பார்த்து சென்றனர்.