ஒசூரில் ஓம்சக்தி அம்மன் கோவிலில் 2ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா

57பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஏரித்தெருவில் உதவி கலெக்டர் அலுவலகம் எதிரில், ஓம் சக்தி அம்மன் கோவில் உள்ளது.

இந்த கோவிலின் 2ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா 2 நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் நிகழ்ச்சிகள் கணபதி ஹோமத்துடன் தொடங்கி, நவக்கிரக ஹோமம், சப்த மாதருக்கான ஹோமம், பூர்ணாஹூதி, ஆகிய நிகழ்ச்சிகளை தொடர்ந்து தீபாராதனை செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அடுத்த நாள், இரண்டாம் கால யாக பூஜை, ஓம் சக்தி மூல மந்திர ஹோமம், பிரத்தியங்கரா ஹோமம், மற்றும் ஜெயதுர்கா ஹோமம் நடத்தப்பட்டு, பின்னர் அனைத்து சாமிகளுக்கும் அபிஷேகம் செய்யப்பட்டது.

தொடர்ந்து பூர்ணாஹூதி, கலசாபிஷேகம் செய்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன், பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பூஜைகளை, பெங்களூரு வில்சன் கார்டனை சேர்ந்த ராஜசேகர குருக்கள் முன்னின்று நடத்தினார். விழாவையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அம்மன் வழிபாடு நடத்தினர்.

தொடர்புடைய செய்தி