கிருஷ்ணகிரியில் பேராபத்து

5335பார்த்தது
கிருஷ்ணகிரியில் பேராபத்து
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள நாகம் பட்டி, போயர் கொட்டாய் கிருஷ்ணகிரி சாலை பகுதியில் சுமார் _ 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் அப்பகுதியில் மத்தூர் மின்சார வாரிய அலுவலக பிரிவு 2-க்கு உட்பட்ட மின் கம்பம் கீழ் பகுதி முதல் மேல் பகுதி வரை சேதமடைந்து கம்பிகள் தெரியும் வரை சிதலமடைந்து காணப்படுகிறது.

இக்கம்பம்தின் மூலம் மின்சாரம் சென்று கொண்டிருப்பதால் காற்று மழை நேரங்களில் எந்நேரத்திலும் முறிந்து விழும் அபாய நிலையில் காணப்படுதால் அப்பகுதி குடியிருப்பு பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இது குறித்து அப்பகுதி மின்சார வாரிய கம்பியாளர் மற்றும் அலுவலர் ஆகியோரிடம் பலமுறை தகவல் தெரிவித்தும்   இதுவரை கண்டு கொள்ளவில்லை' எனவே சிதலமடைந்து காணப்படும் மின்கம்பத்தை மாற்றி புதிய மின் கம்பம் அமைக்குமாறு அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்கின்றனர்.

டேக்ஸ் :