ஆண்டுதோறும் ஜூலை 29-ஆம் தேதி சர்வதேச புலிகள் தினம் கொண்டாட வேண்டு அந்த வகையில் போச்சம்பள்ளி அருகே உள்ள நாகரசம்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தேசிய பசுமை படையின் சார்பில் சர்வதேச புலிகள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிகளுக்கு பொறுப்பு தலைமை ஆசிரியர் சரவணன் தலைமை தாங்கினார். இதில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு மஞ்சப்பைகளை பரிசாக வழங்கி நெகிழிப்பைகளை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.