கிருஷ்ணகிரி மாவட்டம் சந்தூர் அடுத்த பூனம்பட்டிபகுதியை சேர்ந்தவர்கள் குமரன், மாரியப்பன். அண்ணன், தம்பிகளான இவர்கள் சந்தூரில் இருந்து கண்ணன்டஅள்ளி செல்லும் சாலையில் ஹார்டு வேர்ஸ், எலக்ட்ரிக்கல் கடைகள் தனித்தனியாக வைத்துள்ளனர். நேற்று இரவு இந்த ஹார்டுவேர்ஸ் கடையில் மேற்கூரையை உடைக்கப்பட்டு உள்ளே சென்ற மர்ம நபர்கள் கல்லாவில் வைத்திருந்த ரூ. 45 ஆயிரம் திருட்டு போனது. இதேபோல் எலக்ட்ரிகல்ஸ் கடையில் வைத்திருந்த ரூ. 80 ஆயிரம் மற்றும் எலக்ட்ரிக்கல் பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின் பேரில் போச்சம்பள்ளி போலீசாருக்கு விசாரணை நடத்தி வருகின்றனர்.