நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 28வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததால் லக்னோ அணி பேட்டிங் விளையாடி வருகிறது. அந்த அணியின் தீபக் ஹூடா 8 ரன்னில் விளையாடி கொண்டிருந்த போது ஸ்டார்க் வீசிய பந்தை ஓங்கி அடித்த போது அந்தரத்தில் பறந்து கேட்ச் செய்து ரமன்தீப் சிங் அனைவரையும் வியக்க வைத்தார்.