கேரள நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சென்னையை சேர்ந்த மாணவர் தனது உண்டியல் சேமிப்பு பணத்தை வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பரங்கிமலை ஏழுகிணறு பகுதியை சேர்ந்த 5ம் வகுப்பு படிக்கும் கார்த்திக் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக தான் உண்டியலில் சிறுக, சிறுக சேமித்து வைத்த ரூ.2 ஆயிரத்தை வழங்க முடிவு செய்தார். இதற்கு பெற்றோரும் சம்மதம் தெரிவிக்க, கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு 2 ஆயிரத்தை வழங்கியுள்ளார்.