இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை, போலீசார் விசாரணை

74பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே புக்குழி கிராமத்தை சேர்ந்தவர் ரெங்கன் மகள் பிரியா. இவருக்கு இரும்பூதிபட்டியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு கடந்த 08. 09. 2019 ஆம் ஆண்டு திருமணம் நடத்தி வைத்துள்ளனர். 4 வயதில் கோவர்த்தினி என்ற மகள் உள்ளார். கடந்த ஒன்னரை ஆண்டுகளாக கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனது தந்தை வீட்டில் வசித்து வருகின்றார். இவருக்கும் உப்பாறு பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கடந்த சில மாதங்களாக கள்ளத் தொடர்பு இருந்துள்ளது.

கடந்த மூன்று நாட்களாக வீட்டில் இருந்து வெளியே சென்ற பிரியா காணவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஒந்தாம்பட்டியில் ராஜா என்பவரின் வயல்வெளியில் உள்ள வீட்டின் முன்பு குழந்தைகள் விளையாட ஊஞ்சல் ஆடுவதற்காக மரத்தில் கட்டிவைக்கப்பட்ட சேலையில் தூக்கில் தொங்கியவாறு பிரியா இருந்துள்ளார். அருகில் கழுத்தில் கீறிய நிலையில் சந்தோஷ் இருந்துள்ளார் அதனை எடுத்து போலீசாருக்கு உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து இங்கு வந்த உறவினர்கள் சந்தோஷை கார் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்பவ இடத்திற்கு வந்த குளித்தலை போலீசார் பிரியா உடலை மீட்டு பிரத பரிசோதனைக்கு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குளித்தலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி