சூதாட்டத்தில் ஈடுபட்ட மூன்று பேர் கைது

68பார்த்தது
சூதாட்டத்தில் ஈடுபட்ட மூன்று பேர் கைது
கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சிக்குட்பட்ட மட்டகார தெருவில் அஜய் என்பவரின் வீட்டின் அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற குளித்தலை போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்ட அஜய் 22, வினோத் 28, குமார் 45 ஆகிய மூன்று பேர் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த 52 சீட்டுகள், ரூ. 300 பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி