இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

54பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பவனேஸ்வரர் திருக்கோயில் காசிக்கு அடுத்து வடக்கு நோக்கி அமையப்பெற்ற மிகவும் பிரசித்து பெற்ற திருத்தலம் ஆகும். ஆண்டுதோறும் தைப்பூச திருநாளில் கடம்பன் துறை காவிரி ஆற்றில் எட்டு ஊர் சுவாமிகள் ஒன்று கூடி தீர்த்தவாரி மற்றும் சந்திப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெறும். தற்போது கடம்பவனீஸ்வரர் திருக்கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருவதை காரணம் காட்டி இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் வரும் தைப்பூச திருவிழாவிற்கு தடை விதித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் குளித்தலை நகர இந்து முன்னணி சார்பில் குளித்தலை பேருந்து நிலையம் முன்பு தைப்பூச திருவிழாவிற்கு தடை விதித்த இந்து சமய அறநிலைத்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் இன்று வியாழக்கிழமை மாலை 5. 30 மணி அளவில் நடைபெற்றது. இதில் இந்து முன்னணி நகர தலைவர் துரை தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் சிறப்புரை ஆற்றினார். இந்து வழக்கறிஞர் முன்னணி மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் சரவணன் கண்டன விளக்க உரையாற்றினார். இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர்கள் ராஜலிங்கம், திருநாவுக்கரசு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சக்தி மற்றும் இந்து முன்னணியினரை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி