வைக்கோல் ஏற்றி வந்த ஈச்சர் வாகனம் எரிந்து நாசம்

2968பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை தாலுக்கா நெய்தலூர் காலனி அடுத்த பெரிய பனையூர் பகுதியைச் சேர்ந்தவர் கரிகாலன் மகன் மணிகண்டன் (24). இவர் கடந்த 10 ஆம் தேதி மதியம் ஒரு மணி அளவில் ஈச்சர் வாகனத்தில் வைக்கோலை ஏற்றிக் கொண்டு சின்னபனையூர் சாலையில் வந்து கொண்டிருந்துள்ளார்.

அப்போது தாழ்வாக சென்ற மின்சார வயர் உரசி தீப்பிடித்ததில் வைக்கோலுடன் ரூபாய் 6, 50, 000 மதிப்புள்ள ஈச்சர் வாகனம் முற்றிலும் எரிந்து நாசமானது. இது குறித்து மணிகண்டன் தோகைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்து சிஎஸ்ஆர் பெற்றுள்ளார். அதனையடுத்து தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி