நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் ஆய்வு

63பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே இரும்பூதிப்பட்டியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு வழங்கக்கூடிய அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்து ஆய்வு இன்று நடைபெற்றது. குடிமை பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் அரசு முதன்மை செயலாளர் ஹர் சகாய் மீனா மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது ஆய்வில் மூட்டைகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள அரிசி, கோதுமை தரம் குறித்தும் எடை அளவு குறித்தும் ஆய்வு செய்தார். அப்போது அரிசி மூட்டைகள் மேல் உள்ள புழுதிகள் குறித்து அங்கிருந்த குடோன் மேலாளரிடம் முறையிட்டார் இதுபோன்று குப்பைகள், பூச்சிகள் தங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என அங்கிருந்த அலுவலர்களிடம் முறையிட்டுச் சென்றார். மேலும் பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய அத்தியாவசிய பொருட்கள் தரமான முறையில் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் கந்தராஜா மற்றும் மாவட்ட வளங்கள் அலுவலர் சுரேஷ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

அதனைத் தொடர்ந்து திருக்காம்புலியூர் பகுதியில் உள்ள நியாய விலை கடையில் அத்தியாவசிய பொருட்களின் இருப்பு குறித்தும், கைரேகை பதிவு கருவியின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி