Pink October ஐ முன்னிட்டு
Nature trust நடத்திய
பெண்களுக்கான மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை முகாம் குளித்தலை அறிஞர் அண்ணா சமுதாய கூடத்தில் இன்று நடைபெற்றது.
ஹர்ஷமித்ரா உயர் சிறப்பு புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் பிரைவேட் லிமிடெட் மற்றும் மேக்சி விஷன் கண் மருத்துவமனை திருச்சி ஆகிய மருத்துவமனையில் இருந்து மருத்துவர் குழுவினர் பங்கேற்றனர்.
விழாவிற்கு குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் தலைமை தாங்கினார், முனைவர் ஸ்ரீதர், திட்ட ஒருங்கிணைப்பாளர் நேச்சர் டிரஸ்ட் வரவேற்புரை வழங்கினார் ,
குளித்தலை நகர் மன்ற தலைவர் சகுந்தலா பல்லவி ராஜா வாழ்த்துரை வழங்கினார்.
நகர்மன்றத் துணைத் தலைவர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நேச்சர் டிரஸ்ட் அபிராமி ஸ்ரீதர் நன்றியுரை கூற துவக்க விழா விழா நிறைவுற்றது.
முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை, கண் பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோதனை, ஆகிய பரிசோதனைகளை மேற்கொண்டனர்.