கரூர்: யாசகம் பெற்று வந்த முதியவர் திடீர் மரணம்

81பார்த்தது
கரூர்: யாசகம் பெற்று வந்த முதியவர் திடீர் மரணம்
திருச்சி மாவட்டம் முசிறி தாலுக்கா வடுகபட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரெங்கசாமி (70). இவர் குளித்தலை பேருந்து நிலையம் பகுதியில் கடந்த 2 மாதங்களாக வீட்டிற்கு வராமல் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்துள்ளார். நேற்று (அக்.,23) மதியம் ரெங்கசாமிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு அருகில் இருந்தவர்கள் உதவியுடன் குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்கு கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ரெங்கசாமி உயிரிழந்தார். அவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு கரூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது. இது குறித்து ரெங்கசாமி மருமகள் லட்சுமி அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் நேற்று (அக்.,23) வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி