அடையாளம் தெரியாத பெண் மீது கார் மோதி விபத்து. விஏஓ புகார்.

53பார்த்தது
எஸ். வெள்ளாளப்பட்டியில் அடையாளம் தெரியாத பெண் மீது கார் மோதி விபத்து. விஏஓ புகார்.


ஜூன் 8-ம் தேதி காலை 7: 30- மணி அளவில், கரூர் - திருச்சி சாலையில் எஸ் வெள்ளாளப்பட்டி பகுதியில் செயல்படும், மணி மளிகை கடை அருகே அடையாளம் தெரியாத சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அவ்வழியாக வந்த, கரூர் மாவட்டம், மண்மங்கலம் அருகே உள்ள ஆத்தூர் காளிபாளையம் பகுதியைச் சேர்ந்த நவீன் குமார் வயது 27 என்பவர் ஓட்டி வந்த கார், நடந்து சென்ற அடையாளம் தெரியாத பெண் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் அந்தப் பெண்ணுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இந்த சம்பவம் அறிந்த
கரூர் மாவட்டம் சணப்பிரெட்டி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வரும் செந்தில்குமார் வயது 50. என்பவர், சம்பவ இடத்திற்கு வந்து சம்பவத்தை உறுதி செய்து, இது தொடர்பாக காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.


பின்னர் காயமடைந்த அடையாளம் தெரியாத பெண்ணை, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மேலும், காரை வேகமாக ஓட்டி விபத்து ஏற்பட காரணமான நவீன் குமார் மீது, கிராம நிர்வாக அலுவலர் செந்தில் குமார் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ளனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.

டேக்ஸ் :