மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் குவிந்த கிராம பொதுமக்கள்.
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்த "மக்களுடன் முதல்வர்" திட்டம் தமிழக முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக கரூர் மாவட்டத்தில் மொத்தம் ஒரு மாத கால அளவிற்குள் 46 இடங்களில் நடத்த திட்டமிட்டு இதுவரை 32 இடங்களில் மக்கள் உடன் முதல்வர் திட்டம் நடத்தப்பட்டது.
மேலும் 14 இடங்களில் மக்களுடன் முதல்வர் திட்டம் நடைபெற உள்ளது.
இதனை தொடர்ந்து இன்று, கரூர் மாவட்டம் தாந்தோணி வட்டாரத்திற்கு உட்பட்ட, மேலப்பாளையம், கோயம்பள்ளி, ஏமூர் ஆகிய ஊராட்சிகளுக்கு, மக்களுடன் முதல்வர் திட்டம் மேலப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது
.
இந்த முகாமில் தமிழக அரசின் பல்வேறு துறைகள் சார்பாக பொதுமக்களுக்கு உள்ள குறைகள் தொடர்பாக மனுக்களை நேரடியாக அதிகாரிகளிடம் அளித்தனர்.
தகுதியுள்ள மனுக்களை உடனடியாக பரிசீலித்து அதற்குண்டான ஆணைகளை உடனடியாக வழங்கினார்.
இதன் காரணமாக சம்பந்தப்பட்ட ஊராட்சிகளை சேர்ந்த கிராம மக்கள் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்கள் குறைகள் குறித்த மனுக்களை அதிகாரிகளிடம் வழங்கினர்.