சேங்கல் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் நடைபெற்றது.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுக்கா, சித்தலவாய், சேங்கல் ஊராட்சியில் உள்ள இந்திராணி திருமண மண்டபத்தில் "மக்கள் உடன் முதல்வர்" திட்ட முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் சித்தலவாய், சேங்கல், முத்துரெங்கம்பட்டி ஊராட்சி பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் முகாம் அமைக்கப்பட்டது.
இந்த முகாமில் எரிசக்தி துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, கூட்டுறவு துறை கடன் உதவிகள், காவல்துறை, தொழிலாளர் நலம் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம், மீனவர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் மையம் சார்பில் துறை ரீதியான அதிகாரிகள் பங்கேற்றனர்.
பொதுமக்கள் தங்கள் குறை சார்ந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை சந்தித்து மனுக்களை அளித்தனர்.
அதிகாரிகள் மனுக்களை பெற்றுக் கொண்டு, கணினியில் பதிவேற்றம் செய்து, தேவையான உத்தரவுகளை அதிகாரிகள் வழங்கினர்.