டிவிஎஸ் எக்ஸ்எல் மீது ஆம்னி கார் மோதிய விபத்து

69பார்த்தது
டிவிஎஸ் எக்ஸ்எல் மீது ஆம்னி கார் மோதிய விபத்து
கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் வடக்கு தெருவை சேர்ந்தவர் வெங்கட்ராமன் மகன் ராகவேந்திர குமார் (55). இவர் கடந்த ஏழாம் தேதி காலை 6 மணி அளவில் தனது டிவிஎஸ் XL வாகனத்தில் சிந்தலவாடி பஸ் ஸ்டாப் அருகே மேற்கிலிருந்து கிழக்காக வந்துள்ளார். அப்போது பின்னால் அதிவேகமாக வந்த omni கார் மோதியதில் ராகவேந்திர குமார் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். 108 ஆம்புலன்ஸ் மூலம் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இது குறித்து ராகவேந்திர குமார் அளித்த புகாரின் பேரில் விபத்தை ஏற்படுத்திய கரூர் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த சிவப்பிரகாஷ் என்பவர் மீது லாலாபேட்டை போலீசார் வெள்ளிக்கிழமை மதியம் 3 மணி அளவில் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி